மின்சாரம் தாக்கி பசுவுடன் பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பசுவுடன் பெண் பலி

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
தஞ்சாவூர் : மின்சாரம் தாக்கி பசு மாடும், காப்பாற்ற முயன்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூர், கீழையூரைச் சேர்ந்தவர் சரோஜா, 53. இவர் நேற்று முன்தினம் மாலை, தன் பசு மாட்டை மேய்ச்சலுக்கு வயலில் விட்டு, சற்று தள்ளி அமர்ந்து இருந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, பசு உயிருக்கு போராடியது.இதைப் பார்த்த சரோஜா, ஓடிச் சென்று பசுவை காப்பாற்ற முயன்றார்.
 மின்சாரம் தாக்கி  பசுவுடன் பெண் பலி

தஞ்சாவூர் : மின்சாரம் தாக்கி பசு மாடும், காப்பாற்ற முயன்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர், கீழையூரைச் சேர்ந்தவர் சரோஜா, 53. இவர் நேற்று முன்தினம் மாலை, தன் பசு மாட்டை மேய்ச்சலுக்கு வயலில் விட்டு, சற்று தள்ளி அமர்ந்து இருந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, பசு உயிருக்கு போராடியது.இதைப் பார்த்த சரோஜா, ஓடிச் சென்று பசுவை காப்பாற்ற முயன்றார். பசுவின் மேல் கிடந்த மின் கம்பியை எடுத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி பசுவும், சரோஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

5 மாடுகள் பலிதஞ்சாவூர், பூதலுாரை அடுத்த கோட்டரப்பட்டி தரிசு வயலில், 50க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் நேற்று மதியம் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது, வலுவிழந்த மின் கம்பத்திலிருந்து, உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து, மாடுகள் மீது விழுந்தது. இதில், அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஐந்து கறவை பசுக்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. மற்ற மாடுகள், லேசான காயத்துடன் தப்பின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X