இந்தியா

கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் பெருமிதம்

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'கொரோனா பரிசோதனையில் தேசிய அளவில் சிறந்த சராசரியை புதுச்சேரி மாநிலம் அடைந்துள்ளது' என, மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்று சிகிச்சைக்காக, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 3 பேர், ஜிப்மரில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஐந்து இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதுவரை 4919 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 22ம் தேதி வரை, 1 லட்சம் மக்கள் தொகையில் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்திருந்தோம். இப்போது ஒரு லட்சம் பேரில் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை என்ற சிறந்த சராசரியை பெற்றுள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாநில எல்லை வழியாக புதுச்சேரி வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கடலுார், விழுப்புரம் கலெக்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.இதுவரை 700க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் அனுப்பி வைப்பது என்பது அர்த்தம் அல்ல. மருத்துவ வசதி, பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், அவர்களின் மாநிலத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டிய சூழலில் உள்ளவர்களைத்தான் அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.25 ஆயிரம் ரூபாய்சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் கூறுகையில், 'போலீசாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. கொரோவினால் போலீசார் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக 25 ஆயிரம் ரூபாய், அத்தியாவசிய பொருட்கள் வழங்க தயார் செய்து வைத்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X