இந்தியா

8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்; முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்

Added : மே 14, 2020
Share
Advertisement
 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்; முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி: 'புதுச்சேரி தொழில் நிறுவனங்களில் 8 மணி நேரத்திற்கு மேல் பணியாளர்கள் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்' என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தும். 12 மணி நேரம் என கூறவில்லை, 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளோம்.பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள, ரூ. 20 லட்சம் கோடி திட்டத்திற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும். எந்தெந்த துறைக்கு கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி வருகிறது.

புதுச்சேரியில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ, 2000, விவசாயிகளுக்கு ரூ, 5000, கட்டட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ. 2000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ, 1000 கொடுத்துள்ளோம்.டில்லி சென்று வந்தவர்களால் இங்கு கொரோனா வந்ததுபோல், கோயம்பேடு மார்க்கெட்டால் தமிழ்நாட்டில் அதிக அளவில் பரவியுள்ளது. நமது எல்லையை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் சிறப்பாக பணியாற்றி வருவதால், பெரிய அளவில் பாதிப்பு இன்றி உள்ளோம். மாலை நேரத்தில் கூடுதலாக 1 மணி நேரம் கடை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X