இந்தியா

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி

Added : மே 14, 2020
Share
Advertisement

வில்லியனுார்: வில்லியனுார் அருகே, பைக்கில் சென்ற டிரைவர் கார் மோதி உயிரிழந்தார். கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால், மனைவியே, காதலன் துணையுடன் கார் ஏற்றி கொலை செய்தது, இரண்டு மாதங்களுக்கு பிறகு அம்பலமாகி உள்ளது.புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் கந்தசாமி,41; தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.இவருக்கும், கூடப்பாக்கத்தை சேர்ந்த புவனேஷ்வரி,26,க்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 7 மற்றும் 4 வயதில் இரு மகன்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன், லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்கிற அஜித்குமார், ௨௪, என்பவருடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, கந்தசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அஜித்குமாருக்கும், புவனேஷ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த கந்தசாமி, மனைவியை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த புவனேஷ்வரி, காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.கடந்த மார்ச் 14ம் தேதி இரவு 8:00 மணியளவில், தொண்டமாநத்தம் பகுதியில் இருந்து பத்துக்கண்ணு நோக்கி, பேஷன் புரோ மோட்டார் சைக்கிளில் (பிஒய் 05 டபுள்யு 0414) கந்தசாமி சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, கணுவாப்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், யுனிக்கான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அதே திசையில் அதிவேகத்தில் வந்த டாடா இண்டிகா (டிஎன்31 பிபி 8382) கார், ரவிச்சந்திரன் மற்றும் கந்தசாமி பைக் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.இதில் கந்தசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரவிச்சந்திரன் லேசான காயங்களுடன் தப்பினார். இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். கந்தசாமி சிகிச்சை பலனின்றி, 17ம் தேதி இறந்தார்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், கணவர் இறந்தது பற்றி புவனேஷ்வரி கவலையில்லாமல் இருந்ததும், கந்தசாமி இறப்பிற்கு பிறகும் அவரது வீட்டிற்கு அஜித்குமார் அடிக்கடி வந்து சென்றதும் உறவினர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் விபத்து வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.அதில், நடந்தது விபத்து அல்ல; திட்டமிட்டு பைக் மீது காரை மோதி கந்தசாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலம் ஆகி உள்ளது. அஜித்குமார் ஏற்பாட்டின்படி, லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் காரை ஓட்டி வந்து, கந்தசாமி மீது மோதி கொலை செய்தது தெரிய வந்தது.அதையடுத்து, விபத்து என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, வில்லியனுார் சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அஜித்குமாருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X