திருமலைக்கு இறைச்சி எடுத்து சென்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமலைக்கு இறைச்சி எடுத்து சென்றவர் கைது

Added : மே 14, 2020
Share

திருப்பதி : திருமலைக்கு மது, மாமிசம் கொண்டு சென்ற ஒருவரை, கண்காணிப்பு போலீசார் கைது செய்தனர்.

கொரோனா ஊரடங்கால், திருமலைக்கு செல்லும் மலை பாதைகள் மூடப்பட்டுள்ளன. திருமலைக்கு செல்லும் உள்ளூர்வாசிகள், தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு போலீசார், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு, திருப்பதி, அலிபிரி சோதனைச்சாவடிக்கு வந்த ஒரு காரை, கண்காணிப்பு போலீசார் சோதனை செய்தனர். அதில், 5 கிலோ கோழி இறைச்சி, ஆறு மது பாட்டில்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்தனர். அவர் திருப்பதியைச் சேர்ந்த வெங்கடமுனி என்பதும், அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. அவரிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X