இந்தியா

கொரோனா தொற்றுள்ள வாலிபருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு தனிமை

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி:அரும்பார்த்தபுரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், கடந்த 4 நாட்களில் பல இடங்களுக்கு சென்று வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்த 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த வாலிபர், கடந்த 11ம் தேதி காய்ச்சல், சளி இருந்ததால், சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.சந்தேகத்தின்பேரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பினர். ஆனால், அவர் 12ம் தேதி காலை, ஏரிப்பாக்கத்தில் தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு, கம்பெனிக்கு பஸ்சில் சென்று, வீடு திரும்பியுள்ளார்.மாலையில் பரிசோதனை முடிவில், வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி, இரு குழந்தைகள், அக்கம் பக்கத்தினர் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.கொரோனா உறுதி செய்யப்பட்ட வாலிபர் சொந்த ஊர் காஞ்சிபுரம். இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட இரு நாட்களில், காஞ்சிபுரம் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதா என சுகாதாரத்துறை விசாரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X