கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தொழிற்சாலைகள் மின் கட்டணம் ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

Added : மே 14, 2020
Share
Advertisement

மதுரை : 'உயரழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளில், கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், மின் வாரியம் எவ்வித தீவிர மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நுாற் பாலைகள் சங்க தலைமை ஆலோசகர், வெங்கடாசலம் தாக்கல் செய்த மனு:உயரழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு, தனி கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. மார்ச், 24ல், ஊரடங்கு துவங்கியதில் இருந்து நுாற்பாலைகள் செயல்படவில்லை; உற்பத்தியும் நடக்கவில்லை.பாதுகாப்பு காரணங்களுக்காக, சிறு பராமரிப்பு பணிக்கு மட்டுமே, மிகக் குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு, புயல், வெள்ளம், தீ விபத்து போன்ற கால கட்டங்களில், கட்டணத்தில், 20 சதவீதம் மட்டும் வசூலிக்க, மின் வாரிய சட்ட விதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இதன்படி, மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையமும், 20 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி, மார்ச், ஏப்ரல் கட்டணத்தில், 90 சதவீதம் செலுத்தும்படி, மின் வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.அதை திரும்பப் பெற வேண்டும். 20 சதவீத கட்டணம் அல்லது மின் பயன்பாட்டு அளவிற்கேற்ப, கட்டணம் வசூலிக்க வேண்டும்.

கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். 90 சதவீத கட்டணம் வசூலிக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். காணொலியில் நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார்.அரசுத் தரப்பில், '20 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி உத்தரவுஉயரழுத்த மின் இணைப்பு நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், மின் வாரியம் எவ்வித தீவிர மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.மின் வாரியத்தின், 'டான்ஜெட்கோ' தலைவர், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, மே, 26க்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X