இந்தியா

நாராயணசாமிக்கு மகளிர் காங்கிரசார் பாராட்டு

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, மகளிர் காங்., நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.ஊரடங்கால் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசவும், கூட்டம் நடத்தவும் முடியாத சூழல் உள்ளதால், கொரோனா தடுப்பு தொடர்பாக காங்., அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகளிடம் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக விளக்கி கூறுமாறு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, மகளிர் காங்., நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நேற்று மாலை நடந்தது. காங்., அலுவலகத்தில் இருந்தவாறு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி விளக்கி கூறினார். மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், துணைத் தலைவர் தேவதாஸ் உடனிருந்தனர்பெரும்பாலான நிர்வாகிகள், காங்., அரசின் சிறந்த நடவடிக்கைகளால் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக பாராட்டு தெரிவித்தனர். 'வீடியோ கான்பரன்ஸ்' ஆலோசனையில் அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலாளர் நக்மா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X