இந்தியா

கடற்கரையில் பேட்மின்டன் விளையாடிய மூவருக்கு அபராதம்

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரையோரம் பேட்மின்டன் விளையாடிய மூவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர், சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணி செய்ய மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், நேற்று காலை பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஒயிட் டவுன் பகுதியில் ரோந்து சென்றபோது, பழைய சாராய ஆலை கட்டணக் கழிவறை அருகே, ஒரு பெண் உட்பட 3 பேர், சாலையில் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும் முககவசம் அணியவில்லை.அவர்களிடம் விசாரித்ததில், மூவரும் சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பொழுதுபோகாததால் கடற்கரை அருகே விளையாட வந்ததாக கூறினர். மூவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்து, அடுத்த முறை இதுபோல் தடையை மீறினால், வழக்கு பதிவு செய்வோம் என எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X