இந்தியா

'அவதுாறு பரப்புவதை தவிருங்கள்'

Added : மே 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி;'குடிமைப்பொருள் வழங்கல் துறை குறித்து அவதுாறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்' என அத்துறையின் இயக்குனர் வல்லவன் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த அரிசியை, அரசு ஊழியர்கள் மூலம், 18 நாட்களுக்குள் வினியோகித்தது பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் மாநில அரசின் இலவச அரிசியை பயனாளிகளுக்கு முழுவதுமாக வழங்க ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரியில் மட்டுமே 94 சதவீதம் அரிசி வினியோகித்து முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மத்திய அரசு ஒதுக்கிய பருப்பு வினியோகம் கடந்த 9ம் தேதி துவங்கியது. இப்பணி மூன்று தினங்களில் முடிவடையும்.அனைத்து துறைகளின் ஒத்துழைப்போடு நிவாரணம் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு அவதுாறு பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X