சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுச்சேரி : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால், மனைவியே, காதலன் உதவியுடன் கார் ஏற்றி கணவரை கொலை செய்தது, இரண்டு மாதங்களுக்கு பின், அம்பலமாகி உள்ளது.

இது குறித்து, புதுச்சேரி வில்லியனுார் போலீசார் கூறியதாவது:புதுச்சேரி, காட்டேரிக் குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 41; தனியார் பள்ளி வேன் டிரைவர். இவருக்கும், கூடப்பாக்கத்தை சேர்ந்த புவனேஷ்வரி, 28, என்பவருக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 7 - 4 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.


நண்பனின் துரோகம்


சில ஆண்டுகளுக்கு முன், லிங்காரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த, அஜித்குமார், 24, என்பருடன், கந்தசாமிக்கு நட்பு ஏற்பட்டது.தொடர்ந்து, கந்தசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அஜித்குமாருக்கும், புவனேஷ்வரிக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது.இதையறிந்த கந்தசாமி, மனைவியை கண்டித்துள்ளார்.ஆத்திரம்அடைந்த புவனேஷ்வரி, காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். மார்ச் 14 இரவு, 8:00 மணிக்கு, 'பேஷன் புரோ' பைக்கில் கந்தசாமி சென்று கொண்டிருந்தார்.அவரது பின்னால், ரவிச்சந்திரன் என்பவர், 'யுனிகான்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் வேகமாக வந்த டாடா இண்டிகா கார், ரவிச்சந்திரன் மற்றும் கந்த சாமி பைக் மீது அடுத்தடுத்து மோதி, நிற்காமல் சென்றது.இதில், கந்தசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, 17ல் இறந்தார். ரவிச்சந்திரன் லேசான காயங்களுடன் தப்பினார்.

கணவர் இறந்தது பற்றி, புவனேஷ்வரி கவலையில்லாமல் இருந்ததும், அவரது வீட்டிற்கு அஜித்குமார் அடிக்கடி வந்து சென்றதும், உறவினர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.அவர்கள் கொடுத்த புகாரின்படி, விபத்து வழக்கை தீவிரமாக விசாரித்ததில், அஜித்குமார் ஏற்பாட்டின்படி, பிரவீன்குமார், 32, என்பவர், காரை ஓட்டி வந்து, கந்த சாமி மீது மோதி கொலை செய்தது தெரிந்தது. இவ்வாறு, போலீசார் கூறினர்.அஜித்குமார், பிரவீன்குமார், புவனேஷ்வரியை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில், 2019 ஜூலை, 12ல் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது.கொலை செய்யப்பட்டவர், கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன், 39; பெரம்பலுார் ரோவர் கல்லுாரி டிரான்ஸ்போர்ட் மேலாளர் என்பது தெரிந்தது.இவருக்கு சுதா, 37, என்ற மனைவி, 12 - 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். 'கணவரை காணவில்லை' என, கடலுார், திருப்பாதிரிபுலியூர் போலீசில், சுதா புகார் அளித்திருந்ததும் தெரிந்தது. அதே நேரம், கணவர் மாயமானது முதல், சுதாவும், அதே பகுதியை சேர்ந்த சிவராஜ், 23, என்பவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதும் தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:ஸ்ரீதரன், தன் மகன்களை, காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அவர் ஊரில் இல்லாத நேரங்களில், அதே ஊரைச் சேர்ந்த சிவராஜிடம் காரை கொடுத்து, குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு கூறுவார்.இப்படி வந்தபோது, சுதாவுடன், சிவராஜுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்ததை, ஸ்ரீதரன் தம்பி ஸ்ரீநிவாசன் பார்த்து, அண்ணனிடம் கூறியுள்ளார்.


கடும் எச்சரிக்கை


இதையடுத்து, சிவராஜை எச்சரித்து, வீட்டிற்கு வரவேண்டாம் என, ஸ்ரீதரன் கூறியுள்ளார். 2019 ஜூலை, 10ல், ஸ்ரீதரன் வெளியூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். அன்றிரவு சிவராஜ், சுதா இருவரும், வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர்.அப்போது, திடீரென ஸ்ரீதரன் வந்து விட்டார். கட்டில் அடியில் பதுங்கிய சிவராஜ் மற்றும் சுதாவை ஸ்ரீதரன் தாக்கியுள்ளார். சிவராஜ், சுதா இருவரும் சேர்ந்து, ஸ்ரீதரனை தாக்கி கொலை செய்துள்ளனர்.உடலை வீட்டிற்குள்ளே வைத்திருந்து, மறுநாள் இரவு, முந்திரி தோப்பிற்கு காரில் எடுத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இருவரையும், ஊமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prasath -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202009:36:15 IST Report Abuse
prasath naaayai veettirukku veliyil than katta veandum..ulle anumathithal vaai vaikkathan seiyum...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X