ரயில் பாதையில் நடக்காதீங்க! தெற்கு ரயில்வே எச்சரிக்கை| Don't squat, walk on tracks, urges Railways | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் நடக்காதீங்க! தெற்கு ரயில்வே எச்சரிக்கை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
southern railway, migrant workers, train accidents, indian railways,
 ரயில்வே, தண்டவாளம்

சென்னை : 'தொழிலாளர்கள், பொது மக்கள் யாரும் ரயில் பாதையில் நடக்கக் கூடாது' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் நோக்கி, ரயில் பாதையில் நடந்து சென்றனர். இரவு நேரத்தில், தண்டவாளத்தில் துாங்கியபோது, அந்த வழியாக சென்ற, சரக்கு ரயிலில் அடிபட்டு, 17 பேர் உயிரிழந்தனர்.


latest tamil newsஇதையடுத்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஊரடங்கு உத்தரவால், வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், ரயில்கள் கடந்து செல்லும் நிலை உள்ளது.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொது மக்கள், ரயில் பாதைகளில் நடக்க முற்படுவது ஆபத்தானது; விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தண்டவாளத்தில் நடப்பது, தண்டனைக்குரிய குற்றம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X