பொது செய்தி

இந்தியா

ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர்களுக்கு ராணுவம் வலை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ள, மூன்று புதிய தலைவர்களை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு, ஹிஸ்புல் முஜாஹிதீன். இந்த அமைப்பை, சலாஹுதீன் என்பவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துவக்கினார்.இதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ள, மூன்று புதிய தலைவர்களை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.latest tamil newsபாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு, ஹிஸ்புல் முஜாஹிதீன். இந்த அமைப்பை, சலாஹுதீன் என்பவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துவக்கினார்.இதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு, பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீருக்கான, ஹிஸ்புல் அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, ரியாஸ் நைகூ, 32, கடந்த வாரம், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார்.

நைகூ கொல்லப்பட்டது, ஹிஸ்புல் பயங்கரவாதிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர் கொல்லப்பட்டது பற்றி, சலாஹுதீன் வெளியிட்ட வீடியோவில், 'நைகூவின் மரணம், பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனால், அவர் செய்துள்ள உயிர் தியாகம், காஷ்மீரில் பல ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும். இந்த ஆண்டு மட்டும், 80க்கும் அதிகமானோரை, காஷ்மீருக்காக நாம் இழந்துள்ளோம்' எனக் கூறியிருந்தார்.நைகூ கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீருக்கான ஹிஸ்புல் அமைப்பின் புதிய தலைமை கமாண்டராக, காஜி ஹைதர் என்பவரை, சலாஹுதீன் நியமித்துள்ளார். இவருக்கு உதவியாக, அஷ்ரப் மவுல்வி என்பவரையும், தலைமை ஆலோசகராக, அபு தாரிக் பாய் என்பவரையும் சலாஹுதீன் நியமித்துள்ளார்.

இதுபற்றி, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூறுகையில், 'ஹிஸ்புல் அமைப்பின் புதிய பொறுப்பாளர்களை தேடி வருகிறோம்.'மூவரில், தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, அபு தாரிக் பாய், பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். மூன்று பொறுப்பாளர்களும், அனந்த்நாக், புல்வாமா, ஷோபியன் பகுதிகளில், தீவிரமாக செயல்பட்டு வருவது தெரிந்துள்ளது' என்றனர்.சலாஹுதீனின் சுயநலம் ஹிஸ்புல் அமைப்பை துவக்கிய சலாஹுதீன், காஷ்மீரை சேர்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன், இஸ்லாமிய போதகராக இருந்தார். 1987ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற அவர், அங்கு தான், ஹிஸ்புல் அமைப்பை துவக்கினார்.


latest tamil newsகாஷ்மீர் இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் சலாஹுதீன், தனது மகன்களை மட்டும், நன்கு படிக்க வைத்து, காஷ்மீர் அரசுப் பணிகளில் சேர்த்துள்ளார்.சலாஹுதீனுக்கு ஐந்து மகன்கள். இதில் ஒருவர், ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராகவும், மற்றொருவர், கல்வித்துறையிலும், மூன்றாமவர், விவசாயத்துறையிலும் பணியாற்றுகின்றனர். நான்காவது மகன், டாக்டராக பணியாற்றி வருகிறார். ஐந்தாவது மகன், இன்ஜினியரிங் பட்டம் பெற்று, திறன் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
14-மே-202010:28:01 IST Report Abuse
வாய்மையே வெல்லும் Very soon we should take control of land in pakistan occupied kashmir. Kill all the terrorist groups originating from enemy country pakistan.. Then only muslims in India will behave well. Till then.. they secretly support Pakistan from back end or at times ly which is anti national activities as per Indian law
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
14-மே-202009:08:50 IST Report Abuse
Sanjay Dumilan Prasanna could be a close aide of the new hizbul leaders. Secure him to know more details. The guy is very very dangerous to the nation.
Rate this:
Cancel
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
14-மே-202008:35:51 IST Report Abuse
பேப்பர்காரன் moolai atra moorkka theeviravaathikal
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )மூள எப்பிடி இருக்கும் ஹீஹீஹீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X