பொது செய்தி

இந்தியா

ஒரு பக்கம் மாடு; மற்றொரு பக்கம் மனிதன்: வைரலான வீடியோ

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
coronavirus lockdown, coronavirus, lockdown india, Indore, viral video, trending news

இந்துார்: காளைகள் பூட்டும் வண்டியில், ஒரு புறம் காளை இருக்க, மற்றொரு புறம் மனிதன் இழுத்து செல்லும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. போக்குவரத்து வசதி முடங்கி உள்ளதால், வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து பயணம் செல்கின்றனர். இந்நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ராகுல் என்பவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன், பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்துள்ளனர்.


latest tamil newsஅவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்து செல்கிறார். ம.பி.,யின் இந்தூர் அருகே பட்டர்முண்ட்லா கிராமத்தை சேர்ந்த அவர்கள், ஊரடங்கால் மோவ் நகரத்திலிருந்து, தங்கள் ஊருக்கு சென்று கொண்டுள்ளதாக வீடியோவில் ராகுல் கூறுகிறார்.

மேலும் வீடியோவில் அவர் கூறுகையில், 'ஊரடங்கால் பஸ்கள் ஓடவில்லை. இல்லையெனில் அனைவரும் பஸ்சில் பயணித்திருப்போம். என் தந்தை, சகோதரர், சகோதரிகள், எங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு காளையை, குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க 5,000 ரூபாய்க்கு விற்றதால், இந்நிலை ஏற்பட்டது' என கூறினார்.

இந்த வீடியோ ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பரவியதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உதவிகள் வழங்க, அதிகாரிகள் ராகுலை தேடுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
14-மே-202010:13:25 IST Report Abuse
thamodaran chinnasamy adhigarigal ivargaludaiya mattai mattum thiruppi vaangiththanthaale podhum. kodi kodi punniyam ivagalukku . viraindhu seidhaal mikka nanru .
Rate this:
Cancel
N.Murugan - Nagercoil,இந்தியா
14-மே-202010:12:49 IST Report Abuse
N.Murugan digital India Make in India very good PM & Finance Minister
Rate this:
கூகிள் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
14-மே-202010:25:53 IST Report Abuse
கூகிள்ஊருல எது நடந்தாலும் மோடிதான்னு சொல்ல கிளம்பி வந்துரும் ஒரு குரூப்பு...
Rate this:
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
14-மே-202013:51:30 IST Report Abuse
Lawrence Ronso இந்த நிகழ்வுக்கும் பிரதமருக்கும் எந்த தொடர்பும் இல்லை இது எல்லாவற்றுக்கும் அவர்கள் இந்தியாவில் பிறந்தது தான் குற்றம் ..blame US ப்ரேஸினென்ட் டொனால்ட் trump...
Rate this:
Cancel
ranganathan - bhubaneswar,இந்தியா
14-மே-202009:10:46 IST Report Abuse
ranganathan This is very cruel situation. The Central Govt. should have consulted all the industries and other Head of contract workers before announcing the Lockdown. The pity is they are further announcing extension of Lockdown. In this respect, the Govt. has become very lethargic attitude and don't know how to handle such poor people. They only concentrate big shots. My good wishes to all those such poor workers to return to their home safely. Shri Krishnaya Tubhyam Namah.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X