ஒரு பக்கம் மாடு; மற்றொரு பக்கம் மனிதன்: வைரலான வீடியோ| Truth behind viral video of man pulling bullock cart | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரு பக்கம் மாடு; மற்றொரு பக்கம் மனிதன்: வைரலான வீடியோ

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (11)
Share
coronavirus lockdown, coronavirus, lockdown india, Indore, viral video, trending news

இந்துார்: காளைகள் பூட்டும் வண்டியில், ஒரு புறம் காளை இருக்க, மற்றொரு புறம் மனிதன் இழுத்து செல்லும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. போக்குவரத்து வசதி முடங்கி உள்ளதால், வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து பயணம் செல்கின்றனர். இந்நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ராகுல் என்பவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன், பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்துள்ளனர்.


latest tamil news


அவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்து செல்கிறார். ம.பி.,யின் இந்தூர் அருகே பட்டர்முண்ட்லா கிராமத்தை சேர்ந்த அவர்கள், ஊரடங்கால் மோவ் நகரத்திலிருந்து, தங்கள் ஊருக்கு சென்று கொண்டுள்ளதாக வீடியோவில் ராகுல் கூறுகிறார்.

மேலும் வீடியோவில் அவர் கூறுகையில், 'ஊரடங்கால் பஸ்கள் ஓடவில்லை. இல்லையெனில் அனைவரும் பஸ்சில் பயணித்திருப்போம். என் தந்தை, சகோதரர், சகோதரிகள், எங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு காளையை, குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க 5,000 ரூபாய்க்கு விற்றதால், இந்நிலை ஏற்பட்டது' என கூறினார்.

இந்த வீடியோ ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பரவியதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உதவிகள் வழங்க, அதிகாரிகள் ராகுலை தேடுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X