எல்லையில் ரோந்துப் பணி தான் நடக்கிறது: சீனா விளக்கம்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

பீஜிங்: இந்தியா - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான், தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.latest tamil newsலடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள, பன்காங் சோ ஏரி பகுதியில், இந்திய - - சீன எல்லைப் பகுதி உள்ளது. இங்கு, கடந்த, 5 மற்றும் 6ல், இருநாட்டு படையினர் மத்தியில் பதற்றம் நிலவியது.இந்திய எல்லைப்பகுதிக்கு மிக அருகே, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள், வட்டமிட்டன. பதிலுக்கு, இந்திய ராணுவத்தின், 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், சீன எல்லைப்பகுதியில் சுற்றி வந்தன. இதனால், இரு நாட்டு வீரர்கள் இடையே, சண்டை மூளும் அபாயம் உருவானது.


latest tamil newsஇது குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான், கூறியதாவது: எல்லை விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அங்கு, சீன படையினர், அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். வழக்கமான ரோந்துப் பணியில் தான், சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் நல்லுறவு பாதிக்கப்படாமல் இருக்கவே, சீனா விரும்புகிறது. அதை மேம்படுத்த, இந்திய படையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
14-மே-202012:58:01 IST Report Abuse
prakashc whatever china say communist party , DMK party and Congress parties and Mamatha aunty all are accepting. They want all against India.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-மே-202012:32:27 IST Report Abuse
Krishna LIBERATE TIBET & XINJIANG
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
14-மே-202010:48:08 IST Report Abuse
veeramani 1964 is olden time. Now 2020 is GOLDEN & GLORIOUS time.
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
14-மே-202013:25:37 IST Report Abuse
Pannadai Pandian1962.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X