சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

வாஷிங்டன் : 'கொரோனா வைரஸ் குறித்து உரிய தகவல்களை அளிக்க மறுத்தால், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லியில், தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.latest tamil news

தாக்கல்

'கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.சீனாவிடம் இருந்து மிகப் பெரிய தொகையை இழப்பீடாக கோர உள்ளதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் மூத்த எம்.பி.,யான லிண்ட்சே கிரஹாம், செனட் சபையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதை, எட்டு எம்.பி.,க்கள் வழி மொழிந்துள்ளனர்.


நடவடிக்கை

டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலுக்கு, சீனாவே காரணம். இது தொடர்பாக அமெரிக்கா நடத்தி வரும் விசாரணைக்கு ஒத்துழைத்து, வைரஸ் குறித்த முழு தகவல்களை அளிக்க, சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும். மனித குலத்துக்கு ஆபத்தாக செயல்பட்டு வரும், சீனாவில் உள்ள வனவிலங்குகள் சந்தையை மூட வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டிரம்ப் எடுக்கலாம். இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news
நிபுணர் எச்சரிக்கை


'மாகாணங்களில் வேக வேகமாக கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். அதிக உயிர்களை இழக்க நேரிடும். 'அதனால், நினைத்து பார்க்க முடியாத பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்' என, அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணரான, டாக்டர் ஆன்டனி பாசி, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


20 ஆண்டுகளில் ஐந்து தொற்றுகள்


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராபர்ட் ஓபிரையன் கூறியுள்ளதாவது:கடந்த, 20 ஆண்டுகளில், சீனாவில் இருந்து, ஐந்து வைரஸ்கள் உலகெங்கும் பரவியுள்ளன. சார்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், கொரோனா ஆகியவை சீனாவில் இருந்தே பரவின. இதற்கு மேலும் இது தொடரக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், ஐந்தாவது தொற்றுகுறித்து, அவர் தெரிவிக்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:37:43 IST Report Abuse
Lion Drsekar Even Chinese will accept this decision, Their representatives in our country will not accept this and go against this policy. Let us wait and see their original colour very soon, vandhe madaram
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
14-மே-202015:30:19 IST Report Abuse
Anandan P China might have anticipated this situation, By this time china could have planned differently to manage this. when world is thinking on other direction. Need to think differently, and strike china.
Rate this:
Cancel
P.SENTHIL - COIMBATORE,இந்தியா
14-மே-202015:06:37 IST Report Abuse
P.SENTHIL Owing to Corona virus pandamic the most of the country has been affected and economically going down, so that all the country has to think about to mitigating this virus as well to take necessary action against China. if not taken any action in future the same virus or new virus will spreaded by china without knowing others pain. Please as joint venture globally should take action or to be warn hardly against China or otherwise they may not change their attitude.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X