கொரோனாவை மட்டுமே கவனித்தால் மலேரியா, காசநோய் இறப்புகள் இரட்டிப்பாகும் !

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் கொரோனா வைரஸை சமாளிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் காசநோய், எய்ட்ஸ், மலேரியா இறப்புகள் இந்தியா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்காசிய இயக்குனர் பூனம் சிங், 'கொரோனா நெருக்கடியை எதிர்த்து போராடும் அதே சமயத்தில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் தொற்றுநோய் பரவலின் போது சுகாதார அமைப்புகள் திக்குமுக்காடிப் போனதால் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்த நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது' என குறிப்பிட்டுள்ளார். காசநோய் தடுப்பு அமைப்பு, இம்பீரியல் கல்லூரி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற சில நிறுவனங்கள் இணைந்து மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.


latest tamil news



அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் போடப்பட்டும் ஒவ்வொரு மாத ஊரடங்கிற்கும் 2020 முதல் 2025 வரை கூடுதலாக 40,685 பேர் காசநோயால் இறப்பார்கள். 3 மாத ஊரடங்கு ஏற்படுத்தும் தாக்கத்தால், 2021-ல் உலகளவில் காசநோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்தில் 5 முதல் 8 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருப்போம். 2020 முதல் 2025 வரையிலான காலக் கட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை 65 லட்சம் கூடியிருக்கும்.

இறப்பு எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்து இருக்கும். 2025-க்குள் காசநோய் இல்லா இந்தியா என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சூழ்நிலைகள் முன்னுரிமையை மாற்றக்கூடும். என கூறியுள்ளனர். மற்றொரு ஆய்வில் கொரோனா வைரஸ் மலேரியா இறப்புகளை இரட்டிப்பாக்கும் என்றும், ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் 6 மாத இடையூறு ஏற்பட்டால் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 50 லட்சத்திற்கு அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
14-மே-202011:44:58 IST Report Abuse
Krishna True-REQUIRED
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X