பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் 'சரக்கு' விற்பனைக்கு ஆயத்தம்: தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

Added : மே 14, 2020
Share
Advertisement
 டாஸ்மாக் 'சரக்கு' விற்பனைக்கு ஆயத்தம்: தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஏழூரிலுள்ள டாஸ்மாக் கடை முன்பாக, 'குடிமகன்'கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கு வசதியாக மரத்தடுப்பு அமைக்கும் பணி நேற்று நடந்தது.மாநிலம் முழுவதும், கடந்த, 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது, கிணத்துக்கடவு, புதுக்காலனியில் ஐந்து வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று காரணமாக எட்டு கிலோ மீட்டர் துாரத்திற்கு டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என அரசு அறிவித்தது. இதனால், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட மொத்தம் ஏழு கடைகளில், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஐந்து கடைகள் திறக்கவில்லை. முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகே, சூலக்கல் ரோட்டிலுள்ள கடையும், எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டு, 'சரக்கு' விற்பனை செய்யப்பட்டது.கோர்ட் உத்தரவால், கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கிணத்துக்கடவு, புதுக்காலனியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புகள், கடந்த, 10ம் தேதி அகற்றப்பட்டது.இதனால், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஐந்து டாஸ்மாக் கடைகள் முன், வரிசையில் நின்று 'சரக்கு' வாங்குவதற்கு வசதியாக, மரத்தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது.இதனால், விரைவில் கோர்ட் தடை நீக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, தெரியவருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X