பொள்ளாச்சி:விவசாயிகள் இளம் தென்னங்கன்று நடவின் போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி விவசாயிகள் தென்மேற்கு பருவமழை துவங்கினால், புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்ய ஆயத்த பணிகள் மேற்கொள்கின்றனர்.நிலம் சீரமைப்பு, குழி எடுத்தல் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும் ஆட்களை கொண்டு நடக்கிறது. தென்னங்கன்று நடவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.தென்னங்கன்றுகளை நடவு செய்ய குழிகள் தோண்டும் போது, மூன்றடி ஆழம், மூன்றடி அகலத்தில் தோண்ட வேண்டும். வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால், தென்னை அல்லது பனை ஓலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில் படாதபடி மூன்று மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.நடவுக்கு பின், குழியினுள் இரண்டடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். விதைக்காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி பராமரிக்க வேண்டும். இதன் மூலம் வண்டுகளால் கன்றின் தண்டு மற்றும் குருத்தோலைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE