பொது செய்தி

தமிழ்நாடு

'திறந்தவெளி'யை ஒழிக்க நல்ல சந்தர்ப்பம்

Added : மே 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில், பொதுவழித்தடங்களின் ஓரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.பொள்ளாச்சி ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில், கழிவறை இருப்பது உறுதி செய்யப்பட்டு, இல்லாத வீடுகளுக்கு துாய்மை பாரதம் இயக்கத்தில் மானியம் வழங்கி, ஊரக வளர்ச்சி துறை கழிவறை அமைத்துக் கொடுத்தது.ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுக்கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டன. இப்பணிகள் முழுமை பெற்றதை அடுத்து, மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போனது. இதற்காக, அனைத்து ஊராட்சிகளுக்கும் 'திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி' என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. ஒன்றிய, ஊராட்சி அலுவலர்கள் பாராட்டு பெற்றனர். ஆனால், நடைமுறையில் மக்கள் தங்கள் வீடுகளில் கழிவறை இருந்தாலும், திறந்தவெளி வழக்கத்தை கைவிடவில்லை என்பதே உண்மை.பல ஆண்டுகளாக அரசு பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டும், மானியத்தில் கழிப்பிடம் கட்டிக் கொடுத்தும் இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை.வரும், 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள சூழலை ஒன்றிய நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டு, ஊராட்சி தலைவர், செயலாளர், ஊழியர்களை பயன்படுத்தி, திறந்தவெளி கழிப்பிடங்களை நிரந்தரமாக ஒழித்து விடலாம். அதற்கு, ஊராட்சி நிர்வாகங்கள், ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி, அத்துமீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மக்கள் கட்டுப்பட மறுத்தால், ஊரடங்கு உத்தரவை மீறுதல், நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X