மளிகை பொருள் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மளிகை பொருள் வினியோகம்

Added : மே 14, 2020
Share

பொள்ளாச்சி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சார்பில், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர், மளிகை பொருட்களை வழங்கினர்.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள், 433 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் தாராளம்ஆனைமலை அடுத்த ஆத்துப்பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, மளிகை பொருட்கள் வழங்கி உதவினர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ரேவதி, சுந்தரராஜன், ஊராட்சி தலைவர் சகுந்தலா முன்னிலை வகித்தனர். முதற்கட்டமாக, 60 மாணவர்களின் குடும்பங்களுக்கும், ஐந்து முதியவர்களுக்கும், தலா, 600 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கினர்.வீட்டுக்கு 5 கிலோ அரிசிகோட்டூர் அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், 'பண்ணாரி அம்மன் சுகர்ஸ்' இயக்குனர் பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை இணைந்து, மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர். ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை, வீடு வீடாக சென்று ஊராட்சி முழுவதிலும் வழங்கினர்.பணியாளர்களுக்கு நிவாரணம்வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ராஜா தலைமையில், நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் நிவாரண பொருட்கள் வழங்கினார்.துாய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பை சேகரிக்கும் போது, துாய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். 'மாஸ்க்', கையுறை அணியாமல் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது, என, கமிஷனர் அறிவுறுத்தினார். வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வியாபாரிகளுக்கு 'மாஸ்க்'வால்பாறையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம், நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், இலவசமாக 'மாஸ்க்' வழங்கினார்.கடைகளில் வியாபாரிகள் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக சேர்க்க கூடாது. அரசு அறிவித்துள்ள நேரப்படி கடைகளை திறந்து, மாலையில் அடைக்க வேண்டும், என, கமிஷனர் அறிவுறுத்தினார்.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுசெயலாளர் ஷாஜூஜார்ஜ், பொருளாளர் ஏசுராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடைகளுக்கு 'நோட்டீஸ்'கிணத்துக்கடவில், கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், எந்த கடையிலும், சமூக விலகலை கடைபிடிப்பதில்லை. இதனால், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் ஆகியோர், கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர்.அதில், கடைக்கு வரும் வாடிக்கையாளர், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காவிட்டால், போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர்களுக்கு 'ஆத்மா' உதவிக்கரம்நாட்டுப்புற கலைஞர்களுக்கு, ஆத்மா ஆலயம் அறக்கட்டளை சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், ஊரடங்கு நீட்டிப்பால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.இந்நிலையில், வால்பாறையில் நாதஸ்சுவரம், தவில் வாசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு, சென்னை ஆத்மா ஆலயம் அறக்கட்டளை சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரன், தலைவர் துரைராஜ், ஆலோசகர் ஈஸ்வரன், பொருளாளர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறகுகள் அறக்கட்டளை உதவிபொள்ளாச்சி, நெ. 10 முத்துார் 'சிறகுகள் அறக்கட்டளை' சார்பில், சங்கராயபுரம் பகுதியில் வசிக்கும், 75 குடும்பங்களுக்கும், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குடிசைகளில் வசிக்கும், 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், நிவாரண பொருள்கள் வினியோகிக்கப்பட்டன.அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X