பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.4.39 கோடியில் குடிமராமத்து பணி துவக்கம்

Added : மே 14, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கரும்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 44 ஆயிரம் ஏக்கரும் பாசனம் பெறுகிறது.பழைய ஆயக்கட்டில், ஐந்து கால்வாய்களும், ஐந்து சபைகளும் உள்ளன. புதிய ஆயக்கட்டில், நான்கு கால்வாய்களும், 16 சபைகளும் உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, 82 லட்சம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, 3.57 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட காரப்பட்டி கால்வாயில், நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குடிமராமத்து பணி துவங்கப்பட்டது.வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் தலைமை வகித்தனர். காரப்பட்டி கால்வாய் சபைத்தலைவர் மகேஸ், பழைய ஆயக்கட்டு சங்க செயலாளர் வித்யாசாகர் முன்னிலை வகித்தனர்.விவசாயிகள் கூறுகையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன கால்வாயில், இந்தாண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 4.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.பழைய ஆயக்கட்டு பாசனத்தில் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். புதிய ஆயக்கட்டு பாசனத்தில், ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் குடிமராமத்து பணிகள் முடிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X