சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராயம் 2 லி., பறிமுதல்: ஆனைமலையில் மூவர் கைது

Added : மே 14, 2020
Share
Advertisement
 கள்ளச்சாராயம் 2 லி., பறிமுதல்: ஆனைமலையில் மூவர் கைது

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதுாரில், தென்னை நார் தொழிற்சாலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, கோட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.ஐ., உதயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை கைது செய்து, இரண்டு லி., கள்ளச்சாராயம், 20 லி., ஊறலை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:ஆனைமலை அடுத்த மயிலாடுதுறை சேர்ந்த சகோதரர்கள் கனகராஜ், 45, லோகநாதன், 43. இருவரும் இணைந்து ரமணமுதலிபுதுாரில் 'மாதேஸ்' என்ற தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்த காளியப்பன் மகன் பரமசிவம், 24, இவர்களிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மூவரும் இணைந்து, குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தென்னை நார் தொழிற்சாலையின் ஒரு பகுதியில், பழங்கள், வெள்வேல் பட்டை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சாராயம் காய்ச்சியுள்ளனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X