சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடோனில் திடீர் தீ விபத்து :வாகன உதிரிபாகங்கள் சேதம்

Added : மே 14, 2020
Share
Advertisement
 குடோனில் திடீர் தீ விபத்து :வாகன உதிரிபாகங்கள் சேதம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பழைய வாகனங்களின் உதிரிபாகங்கள் உடைக்கும் குடோனில், தீ விபத்து ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே குமரன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 55. இவருக்கு சொந்தமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள் உடைக்கும் குடோன், ஜமீன் முத்துாரில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பழைய வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன.தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் புருேஷாத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைத்தனர்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. குடோனுக்கு முன்பக்கம், ரோட்டோரம் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்ததும்; குடோனில் இருந்த பழைய வாகனங்களில் தீ மளமளவென பரவியது தெரியவந்தது.தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X