வங்கிகளுக்கு கட்டுப்பாடு இல்லையா? தனிமனித இடைவெளியை காணோம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளுக்கு கட்டுப்பாடு இல்லையா? தனிமனித இடைவெளியை காணோம்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
 வங்கிகளுக்கு கட்டுப்பாடு இல்லையா? தனிமனித இடைவெளியை காணோம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வங்கிக் கிளைகளில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சியில் பொதுமக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள் திறக்கப்பட்டு, வர்த்தம் இயல்புக்கு திரும்புகிறது.வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், வங்கிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், கூட்டத்துக்கு ஏற்ப, வங்கிக் கிளைகளில் நோய் பரவல் தடுப்பு விதிகள் கடைப்பிடிக்கவில்லை.வங்கி வாடிக்கையாளர்கள், தனி மனித இடைவெளியின்றி முண்டியடித்தபடி நின்றனர். குறிப்பாக, பெரும்பாலான வங்கிகளில், குளிர்சாதன வசதி செயல்பாட்டில் உள்ளது.கடைவீதியில், நகைக்கடையில், குளிர்சாதன வசதியை பயன்படுத்தியதாலும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததாலும், அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.ஆனால், குளிர்சாதன வசதியை வங்கிகள் மட்டும் தடையின்றி பயன்படுத்துகின்றன. மேலும், பல வங்கிகளில் ஊழியர்கள் முகக்கவசம் அணிவதில்லை. இதனால், வங்கிகளில் நோய் தொற்று பரவுவதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறது.இது குறித்து, வங்கி கிளை மேலாளர் ஒருவரிடம் கேட்ட போது, 'குளிர்சாத வசதியை பயன்படுத்த அனுமதி உள்ளது. தனிமனித இடைவெளியை மக்கள் தான் கடைபிடிக்க வேண்டும்,' என்றார்.வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்து செல்லும் வங்கிளில் மட்டும் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதால், நோய் கிருமி பரவாதா, அல்லது அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் வங்கிகளுக்கு பொருந்தாதா என்பதை, வருவாய்த்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X