பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கவச உடை தர சோதனை :கோவை 'சிட்ரா'வுக்கு அங்கீகாரம்

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:பாதுகாப்புக் கவச உடைகள் (பி.பி.இ.,) உடைகளுக்கான தர சோதனைக்காக, கோவை 'சிட்ரா', சென்னை கனரக வாகனத் தொழிற்சாலை உட்பட எட்டு ஆய்வகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.'கொரோனா' பரவலைத் தொடர்ந்து, மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, பி.பி.இ., எனப்படும் பாதுகாப்புக் கவச உடைகள் அத்தியாவசியத் தேவையாகியுள்ளன.
திருப்பூர் உட்பட, நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில், இந்த உடைகள், தற்போது தயாராகிவருகின்றன. இந்த உடைகள், உரிய தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு கவனத்துடன் செயல்படுகிறது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம்(சிட்ரா), சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை உட்பட நாடு முழுதும், எட்டு இடங்களில் உள்ள ஆய்வகங்கள், பி.பி.இ., தரச் சோதனைக்காக, மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த ஆய்வகங்கள் அனைத்தும், என்.ஏ.பி.எல்., எனப்படும், தேசிய பரிசோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தின், அங்கீகாரத்தைப் பெற்றவை.உற்பத்தியாளர் தயாரிக்கும் ஒவ்வொரு மாதிரி (சாம்பிள்) பி.இ.,க்களுக்கும், யு.சி.சி., எனப்படும் பிரத்யேக சான்றளிப்பு கோடு, ஆய்வகத்தில், வழங்கப்படும்.
உற்பத்தி செய்யப்பட்ட நாள், உற்பத்தியாளர் பெயருடன், யு.சி.சி., இடம்பெற்றிருக்கும். யு.சி.சி., பெறுவதற்காக, மாதிரி பி.பி.இ., ஆய்வகங்களில், சமர்ப்பிக்கும்போது, நிறுவனப்பெயர், பதிவெண், உத்யோக் ஆதார், ஜி.எஸ்.டி., எண்களை ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.விமான நிலையங்களில்விற்பனை மையம்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும், பி.பி.இ., விற்பனையகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமானங்கள் இயங்கத் துவங்கும்போது, பயணிகள் பி.பி.இ., அணிவது கட்டாயமாக இருக்கும். பயணி, பி.பி.இ., எடுத்து வர மறந்துவிட்டால், உடனடியாக, இதைப் பெறும் வகையில், இந்த விற்பனையகங்கள் இருக்கும். கோவை, புனே உள்ளிட்ட விமான நிலையங்களில், இந்த விற்பனையகங்கள் அமைய உள்ளன. விற்பனையகங்கள் விமான நிலைய வளாகத்திற்குள்ளேயோ அல்லது அருகிலேயோ செயல்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X