பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துறை மீண்டும் எழுச்சி பெறும்! மத்திய அரசு சலுகையால் மகிழ்ச்சி

Added : மே 14, 2020
Share
Advertisement
 தொழில் துறை மீண்டும் எழுச்சி பெறும்! மத்திய அரசு சலுகையால் மகிழ்ச்சி

புனரமைக்க உதவும்!ஈஸ்வரன், திருப்பூர் 'சைமா' தலைவர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறை, மீண்டும் எழுச்சி பெறுவதற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கடன் திருப்பி செலுத்த ஓராண்டு அவகாசம் அளித்திருப்பது, நிறுவனங்களுக்கு சுமையை குறைத்துள்ளது.கடன் செலுத்த முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களுக்கும், புதிய கடன் வழங்குவதால், ஏராளமான நிறுவனங்கள், தங்களை புனரமைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய நிறுவனங்கள், சர்வதேச அளவில் எந்த நாட்டுடனும் போட்டியிடும் திறனை பெற உள்ளன. அரசு அளித்துள்ள சலுகைகளை, நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தி, வர்த்தகத்தை வளர்ச்சி பெற செய்ய வேண்டும். இதுவே, அரசுக்கு செய்யும் கைம்மாறாக இருக்கமுடியும்.நிறுவனங்கள் எழுச்சி!சக்திவேல், ஏ.இ.பி.சி., தலைவர்:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து, அறிவித்துள்ள பிரதமர், நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்கள். மூன்று லட்சம் கோடி வரை பிணையமில்லா கடன் வழங்குவதால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்எழுச்சிபெறும். அதிகளவு வேலை வாய்ப்பு வழங்குவது. அன்னிய செலாவணி ஈட்டித்தரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கான பிரத்யேக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் மேற்கொள்ளும் ஏற்றுமதி நிறுவனங்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வகைப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சலுகைகள் அறிவிக்கவேண்டும்.
நிறுவனங்களில் எத்தனை தொழிலாளர் பணிபுரிந்தாலும், அனைவருக்கான பி.எப்., தொகையை அரசு செலுத்த வேண்டும்.புத்துயிர் பெறும்!ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க தலைவர்: ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன. மீண்டும் இயங்குவதற்கு, நிதி தேவைப்படுகிறது. மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள், தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளன.
மூன்று லட்சம் கோடி பிணையமில்லா கடன்; கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்கும், 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதால், அத்தகைய நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றெழும்.நிம்மதி அளிக்கிறது!நாகராஜன், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசுக்கு நன்றி. கடனை திருப்பிச் செலுத்த ஓராண்டு அவகாசம் அளித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. உலக அளவில், வங்கி கடன்களுக்கான வட்டி மிக குறைவாக உள்ளது. அதேபோல், நம் நாட்டிலும், நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.பணபுழக்கம் அதிகரிக்கும்!ராமநாதன், ஆடிட்டர், திருப்பூர்: மின் பகிர்மான நிறுவனங்களுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் நிறுவன மின் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகள் விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கான, தொழில் முனவோர் பங்களிப்பு பி.எப்., தொகையை அரசே செலுத்திவிடுகிறது. டி.டி.எஸ்., வரி பிடித்தம், 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது; நாளை முதல் (இன்று) இது அமலுக்குவருகிறது. கார்பரேட் நீங்கலாக அனைத்து வரி செலுத்துவோருக்கும், வருமான வரி ரீபண்ட் வழங்கப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், பண புழக்கத்தை அதிகரிப்பதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.முதலீட்டு உச்சவரம்பு மட்டுமின்றி ஆண்டு வர்த்தக அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வரையறை செய்திருப்பதன்மூலம், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பயன்பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X