பொது செய்தி

தமிழ்நாடு

'சிக்கலான தருணத்தில் கை கொடுக்கும் உதவி!'

Added : மே 14, 2020
Share
Advertisement
 'சிக்கலான தருணத்தில் கை கொடுக்கும் உதவி!'

அதிக பயன் அளிக்கும்!நிர்மல்குமார், செயற்குழு உறுப்பினர், கோவை மின் வியாபாரிகள் சங்கம்: இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. நிதியமைச்சரின் அறிவிப்புகள் இந்திய நிறுவனங்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அறிவிப்புகள் அதிகளவில் பயன் அளிக்க கூடியவையாக இருக்கும்.மூலதனம் அதிகரிக்க வாய்ப்புஜலபதி, துணைத்தலைவர் தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனம்: தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கானது. புதிய தொழில் துவங்க கடன் பெறவும், ஏற்கனவே தொழில் புரிய வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை தான் இன்றைய பிரச்னை. இதைப்போக்க அறிவிப்புகள் வெளியிடப்படும்; அதிகளவு கடன் வசதி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஈட்டுறுதியை, 10 சதவீதம் செலுத்தினால் போதும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களுக்கு உதவிபுரியும். நிறுவனங்களின் டி.டி.எஸ்., 25 சதவீதம் குறைத்துள்ளது மிகவும் வரவேற்கக் கூடியது. அறக்கட்டளைகள், சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டிருப்பதன் மூலம் மூலதனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரூ.200 கோடி அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு இனி அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. வாராக்கடன் பட்டியலில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கியிருப்பது அத்துறையை முன்னேற்ற உதவும்.உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்ரதிப்பிரியா, நிதி ஆலோசகர்: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் தர அறிவிப்பு வெளியிட்டிருப்பது அந்நிறுவனங்களை முன்னேற்ற உதவும். குறிப்பாக அக்கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. வருமானவரி செலுத்துவதற்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியிருப்பது இக்கட்டான இத்தருணத்தில் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க உதவும். நம் நாட்டு தயாரிப்புகளை மக்கள் வாங்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மீட்டெடுக்க உதவும்!வெங்கட்ராமன், மேலாளர், கோவை மாவட்ட முன்னோடி வங்கி: வங்கிகளில் தற்போது, 10 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள அனைத்து அறிவிப்புகளும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டு எடுக்க பெரிதும் உதவும். கொரோனா பாதிப்பினால், சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு இவ்வறிவிப்புகள் பெரும் உதவியாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X