பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வால் மின் தேவை அதிகரிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், 12 மின் நிலையங்கள் உள்ளன. 13 அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில், தினமும், 833.65 மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும். கடந்தாண்டு பெய்த மழையால், அணைகளில், 75 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், கோவை, திருப்பூர் பகுதிகளில், தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. மின் உற்பத்தி தேவையும் குறைந்தது. கடந்த, 11ம் தேதி முதல் தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கியதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மின் தேவை அதிகரித் துள்ளது.மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில்,''ஊரடங்கு தளர்வால், தொழில் நிறுவனங்கள் இயங்க துவங்கி உள்ளன. இதற்காக, மின் உற்பத்தி, 100 மெகாவாட்டில் இருந்து, கடந்த இரண்டு நாட்களாக சராசரியாக, 400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தேவை இருந்தால், மின் உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X