உடுமலை:உடுமலை பகுதிகளில் 'கொரோனா' தொற்று பரவலை தடுக்கும் வகையில், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் தீயணைப்புத்துறை சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.'கொரோனா' நோய் தொற்றுப்பரவலை தடுக்க, தீயணைப்பு துறை சார்பில், தினமும் காலை நேரங்களில், கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை தீயணைப்புத்துறையினர், உடுமலை நகராட்சி பகுதிகள், அரசுக்கல்லுாரி, கோட்டாட்சியர் அலுலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, கிராமப்பகுதிகளிலும் கிருமி நாசனி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. பெரியகோட்டை ஊராட்சி, திருப்பூர் ரோடு, புக்குளம் ஊராட்சி, கண்ணமநாயக்கனுார், எலையமுத்துார் ரோடு பகுதியிலும் தீயணைப்புத்துறை, உடுமலை நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு வாகனத்திலுள்ள, 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரில், 120 லிட்டர் கிருமி நாசினி கலக்கப்பட்டு, ரோடுகள், பிரதான வீதிகள் மற்றும் கட்டடங்களில் தெளிக்கப்படுகிறது. இதன் மூலம், விரைவாகவும், அதிக அளவிலான பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE