கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்: மீண்டும் மானியம் வழங்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்: மீண்டும் மானியம் வழங்க எதிர்பார்ப்பு

Added : மே 14, 2020
Share

உடுமலை:பரவலாக பெய்த மழையை தொடர்ந்து, கோடை உழவு பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வேளாண்துறை மூலம் மீண்டும் மானியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோடை காலங்களில் பெய்யும் மழை நீரானது, மழை நீர் பூமிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி, நிலத்தில் சேமிக்க கோடை உழவு மிகவும் அவசியமானதாகும். குடிமங்கலம் வட்டாரத்தில், பரவலாக பெய்த கோடை மழைக்கு பிறகு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 'கோடை உழவு செய்யும் போது, உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால், மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் சிதைக்கப்படுகிறது.மேலும், காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால், மண்ணின் அங்கக சத்து அதிகரிக்கும். இந்த உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழை நீரானது, மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி, வீணாகிறது. கோடை உழவு செய்யும் போது, மண் இறுக்கம் குறையும். மண்ணை புழுதிபட உழுவதால், மண் வளம் பெருகும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது.இயற்கையான முறையில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த சிறந்த வழி, இதுவாகும். விவசாயிகள், வரும் பருவ கால சாகுபடியில் அதிக மகசூல் பெற, கோடை உழவு செய்ய வேண்டும். இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், வேளாண்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. வட்டாரத்துக்கு, 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஏக்கருக்கு, 500 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டும், இந்த மானியம் வழங்கினால், உதவியாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X