பொது செய்தி

இந்தியா

ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணி? பரிசீலனையில் புதிய திட்டம்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய ராணுவத்தில், இளைஞர்கள், 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டம், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இந்தியா ராணுவம் 13 லட்சம் ராணுவ வீரர்களுடன் உலக நாடுகளுக்கு இடையே வலுவான ராணுவமாக விளங்குகிறது. ராணுவத்தில் தற்போது பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, ராணுவத்தில் இளைஞர்கள் 3 ஆண்டுகள்
Army, civilians, internship, Indian Army, soldiers, young people, ராணுவம்

புதுடில்லி: இந்திய ராணுவத்தில், இளைஞர்கள், 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டம், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா ராணுவம் 13 லட்சம் ராணுவ வீரர்களுடன் உலக நாடுகளுக்கு இடையே வலுவான ராணுவமாக விளங்குகிறது. ராணுவத்தில் தற்போது பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, ராணுவத்தில் இளைஞர்கள் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் குறுகிய கால சேவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsஇதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் திறமையான இளைஞர்களை சேர்க்க பலவேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுகிய கால சேவையாக, ராணுவத்தில் இளைஞர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். புதிய சீர்திருத்த திட்டத்தில், அதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட வரையறைகள் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-மே-202022:56:23 IST Report Abuse
மதுரை விருமாண்டி மதங்களை அழித்தால் மனிதம் தழைக்கும்.. உலகம் உள்ளங்கை அளவு சுருங்கி விட்ட பிறகு, மதமும், ராணுவமும் சேர்ந்து மக்களை அழித்த பிறகும் இந்த விவாதமெல்லாம் கற்காலத்தை சேர்ந்தது.. நிலத்தை பிரித்து சண்டை போடும் கூட்டம், எல்லையில்லா வானையும், கடலையும் territorial water, no-fly zone என்று பிரித்து கொலை செய்யும் கூட்டம். சுதந்திரமாக கடலை கடக்கும் மீன் கூட்டத்துக்கும், கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் பறவைகளுக்கும் மதங்களா, இல்லை தேசபக்தியா? இயற்கையும் உலகும் மனிதனை படைத்தது தன்னை தற்கொலை செய்து கொண்டதோ ..
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
14-மே-202018:05:23 IST Report Abuse
SIVA G  india இல்லங்களில் தெய்வ நம்பிக்கை எப்படி குழந்தைகளுக்கு வளர்க்க படுவது போல ஐந்து வயது முதல் மத கலக்கல் இல்லாத தேசபக்தி எல்லா பள்ளிகளில் கட்டாயம் வளர்க வேண்டும். பின் இராணுவத்தில் பணி கட்டாயம் செய்ய வேண்டும். எல்லாவற்றிகும் தேர்வு போல தேசத்தை பற்றியும் தேசபக்தி பற்றியும் 90% வெற்றி பெற்றவர்கள் மட்டுமே, அரசியலுக்கு வர அனுமதிக்கபட வேண்டும்.
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
14-மே-202017:23:18 IST Report Abuse
ராஜா வரவேற்க்கபட வேண்டிய ஒன்றாகும். இது ஏற்கனவே பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். இதனால் சுய ஒழுக்கமும், நாட்டிற்கு சேவை செய்யும் மனோபாவமும் வளரும். மேலும் இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைய கால இடைவெளியும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X