புதுடில்லி: இந்திய ராணுவத்தில், இளைஞர்கள், 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டம், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா ராணுவம் 13 லட்சம் ராணுவ வீரர்களுடன் உலக நாடுகளுக்கு இடையே வலுவான ராணுவமாக விளங்குகிறது. ராணுவத்தில் தற்போது பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, ராணுவத்தில் இளைஞர்கள் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் குறுகிய கால சேவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் திறமையான இளைஞர்களை சேர்க்க பலவேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுகிய கால சேவையாக, ராணுவத்தில் இளைஞர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். புதிய சீர்திருத்த திட்டத்தில், அதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட வரையறைகள் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE