மணக்கவில்லை மல்லிகை: பூ வரத்து அதிகம்; விற்பனை டல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணக்கவில்லை மல்லிகை: பூ வரத்து அதிகம்; விற்பனை 'டல்'

Added : மே 14, 2020
Share
உடுமலை:'கொரோனா' ஊரடங்கு காரணத்தால், உடுமலை சுற்றுப்பகுதியில் மல்லிகை மலர் வரத்து அதிகரித்தும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தில் மல்லிகை பூக்களின் சீசன் துவங்குகிறது. இக்காலத்தில் மல்லிகை சாகுபடி அதிகளவில் இருப்பதால், சந்தைக்கு வரத்து அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் அதிக லாபம் தரக்கூடியதாக உள்ளது. 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக,
 மணக்கவில்லை மல்லிகை: பூ வரத்து அதிகம்; விற்பனை 'டல்'

உடுமலை:'கொரோனா' ஊரடங்கு காரணத்தால், உடுமலை சுற்றுப்பகுதியில் மல்லிகை மலர் வரத்து அதிகரித்தும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தில் மல்லிகை பூக்களின் சீசன் துவங்குகிறது. இக்காலத்தில் மல்லிகை சாகுபடி அதிகளவில் இருப்பதால், சந்தைக்கு வரத்து அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் அதிக லாபம் தரக்கூடியதாக உள்ளது. 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் சீசன் துவங்கியும், பூக்களை சந்தைப்படுத்த முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உடுமலை பூ சந்தைக்கு, நிலக்கோட்டை பகுதிகளிலிருந்து மல்லிகை கொண்டு வரப்படுகிறது. சந்தைக்கு வரத்து அதிகரித்து வருவதால், ஒரு கிலோ, 200 ரூபாய் வீதம் வரை குறைந்துள்ளது. ஆனால், ஊரடங்கு இன்னும் செயல்பாட்டில் இருப்பதும், விசேஷங்கள் நடத்த பல விதிமுறைகள் இருப்பதாலும், வாடிக்கையாளர்களும் பூ வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. சந்தைக்கு வரத்து அதிகரித்திருந்தும் விற்பனை இல்லாமல், வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X