உடுமலை:ஊரடங்கு தளர்வு விதிகளின்படி உடுமலை சுற்றுப்பகுதி, நுாற்பாலைகளில், குறைந்தளவு தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி துவங்கியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதி களில், அதிகளவு சிறு நுாற்பாலைகள், ஓ.இ., மில்கள் இயங்கி வருகின்றன. விசைத்தறிக்கான 'வார்ப்' ரக நுால் மற்றும் பாலியஸ்டர் உட்பட செயற்கை நுாலிழை உற்பத்தியிலும், இத்தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன.
நிலையில்லா பஞ்சு விலை, விசைத்தறி தொழில் முடக்கம், தொழிலாளர் பற்றாக்குறை உட்பட பிரச்னைகளால், பெரும்பாலான நுாற்பாலைகளில், முழு உற்பத்தி திறன் எட்டுவதில் சிக்கல் இருந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நட வடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், நுாற்பாலைகள் மூடப்பட்டன. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து நுாற்பாலைகளில் தங்கி வேலைபார்த்த தொழிலாளர்களும் வேலை இல்லாமல், பாதித்தனர். ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஊரகப்பகுதியிலுள்ள, தொழிற்சாலைகள் இயங்க, பல்வேறு விதிமுறைகளுடன், அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, குறைந்தளவு தொழிலாளர்களைக்கொண்டு நுாற்பாலைகளில் உற்பத்தி துவங்கியுள்ளது.விசைத்தறிகளில், உற்பத்தி சீராகும் போது, நுால் தேவை அதிகரித்து, நுாற்பாலைகளிலும் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE