ஈரோடு: ஈரோடு தாலுகாவில், ஐந்து வருவாய் கிராமங்களில், இலவச மண் பரிசோதனை முகாம் நடந்தது. தமிழகத்தில் இலவச மண்வள அட்டை திட்டம், 2015ம் ஆண்டு முதல் நடை முறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த ஐந்தாண்டுகளில், மண்வளம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியப்பட்டு, என்ன பயிர் செய்யலாம், எவ்வகை உரம் பயன்படுத்தலாம் என, பரிந்துரைக்கும். நடப்பு, 2020 - 21ம் ஆண்டு மண் மாதிரிகள் எடுக்கும் பணி, ஈரோடு மாவட்டத்தில், அணை நாசுவன்பாளையம், நசியனூர், வீரப்பம்பாளையம், புத்தூர்புதூர், காஞ்சிகோவில் ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில் நடந்தது. முகாமில், வேளாண்மை அதிகாரி நாசர்அலி, மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பது குறித்தும், கோடைகால உழவு பணிகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இங்கு சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எவ்வகையான பயிரை பயிரிடலாம் என்பது குறித்து விவசாயிகருக்கு பிறகு பரிந்துரைக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE