பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய அறுவடைக்கு சென்ற 44 பேர் 50 நாட்களுக்கு பின் மீட்டு 'தனிமை'

Added : மே 14, 2020
Share
Advertisement

கோபி: கர்நாடகா மாநில எல்லைக்கு, வெங்காய அறுவடைக்காக, சென்ற, 44 பேர், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். 50 நாட்களுக்கு பின் அவர்களை மீட்டு, பங்களாப்புதூர் மையத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் யூனியன், கொங்கர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், கொரோனா தொற்று தலைதூக்கும் முன், கர்நாடகா மாநில எல்லையில், கூலி வேலைக்கு சென்றனர். அதன் பின் எவரும், அவரவர் சொந்த ஊர் திரும்ப வில்லை என வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன் தலைமையில், வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர். பெரிய கொடிவேரி அருகே வேட்டுவன்புதூரை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக, கடந்த மார்ச், 23ல், கர்நாடகா மாநிலம், சிக்கல்லா என்ற இடத்துக்கு, வெங்காயம் அறுவடைக்கு, கூலி வேலைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. கொங்கர்பாளையம் கிராமம், தமிழ் நகர் பகுதியை சேர்ந்த, மற்றொரு குழுவினர், கடந்த, மார்ச்,13ல், கூலி வேலைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும், ஊரடங்கால் அவரவர் சொந்த ஊர் திரும்ப முடியாமல், எல்லையில் அவதிப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாநில எல்லையில் வேலைக்கு சென்றிருந்த, 15 ஆண்கள், 27 பெண்கள், இரு குழந்தைகள் உட்பட மொத்தம், 44 பேர் மீட்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு அழைத்து வரப்பட்டனர். அனைவருக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, டி.என்., பாளையம் அருகே பங்களாப்புதூர், தனியார் இன்ஜினியரில் கல்லூரி மையத்தில் தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறையினர் நேற்று முதல் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X