பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் பறிமுதல் வாகனங்கள் அதிகரிப்பு: மதுவிலக்கு ஸ்டேஷனில் இடவசதியின்றி அவதி

Added : மே 14, 2020
Share
Advertisement

கோபி: ஊரடங்கால் பறிமுதல் நடவடிக்கை அதிகரித்துள்ளதால், வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்த போதிய இடவசதியின்றி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் அவதியுறுகின்றனர்.
கோபி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதி ஸ்டேஷன்கள், கோபி மதுவிலக்கு பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளன. கோபி அருகே கள்ளிப்பட்டியில், நேரு நகரில் மதுவிலக்கு பிரிவு ஸ்டேஷன் இயங்குகிறது. கொரோனா தொற்று தலைதூக்கிய முதல், மதுவிலக்கு சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த, மார்ச், 22 முதல், நேற்று வரை, மொத்தம், 456 வழக்குகளில், 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடப்பாண்டு துவங்கியது முதல், நேற்று வரை மொத்தம், 680 வழக்குகளில், 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோபி மதுவிலக்கு பிரிவு, சொந்த கட்டடமின்றி, மாதம், 13 ஆயிரத்து, 600 ரூபாய் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. தற்போது ஊரடங்கால், மதுவிலக்கு சார்ந்த வழக்குகளில், பறிமுதல் நடவடிக்கை அதிகரித்துள்ளதால், போதிய இடவசதியின்றி, வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் மீது, மற்ற வாகனத்தை நிறுத்தி போலீசார் சமாளித்து வருகின்றனர். இதேபோல், பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், ஸ்டேஷனுக்கு வெளியே பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X