பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் இன்று கொப்பரை ஏலம்: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

கோபி: கொப்பரை தேங்காய் ஏலத்தில் பங்கேற்க, கோபி விற்பனை கூட நிர்வாகம், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கோபி விற்பனைக்கூட கண்காணிப்பாளர் நித்தியானந்தி கூறியுள்ளதாவது: கோபி-சத்தியமங்கலம் சாலையில், ல.கள்ளிப்பட்டி அருகே, கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை மதியம், 1:00 மணிக்கு, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கும். கொரோனா தொற்று தலைதூக்கியது முதல், இங்கு ஏலம் நடக்கவில்லை எனக்கருதி, விவசாயிகள் குறைந்தளவே கொப்பரை தேங்காய் மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர். வாரந்தோறும் வியாழனன்று, வழக்கம்போல் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. எனவே விவசாயிகள், எந்த சந்தேகமுமின்றி, வழக்கம்போல் இன்று நடக்கும், கொப்பரை ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஏலத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள், தங்களின் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டு வரவும். மேலும், 04285-222278 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விவசாயிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X