பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறிவிப்பு: மலை கிராம மாணவர்கள் வேதனை

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சத்தியமங்கலம்: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மலை கிராம மாணவ, மாணவியர் வேதனை அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கான ஊரடங்கால் கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு தொடர்கிறது. பிப்., துவக்கம்முதல் பிளஸ் 1, பிளஸ் 2 பிராக்டிக்கல் மற்றும் பொதுத்தேர்வு துவங்கியதால், பள்ளிகளுக்கு விடுமுறை அல்லது பாதி நேர பள்ளிகளாக செயல்பட்டன. குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மார்ச், 24 முதல் ஊரடங்கால், இன்று வரை அவர்களால் புத்தகத்தை படிக்க முடியவில்லை. இந்நிலையில் ஜூன், 1 முதல், 12 வரை, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்க உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சத்திய மங்கலம் இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் நடராஜ் கூறியதாவது: கொரோனாவுக்கான பதற்றத்தால், கிராமங்களில் உள்ள குழந்தைகள், மலை கிராம குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். புத்தகங்களை மறந்து, பிற குழந்தைகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மாறி உள்ளனர். தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளி மூலமும், ஆசிரியர்கள் தனிப்பட்ட விருப்பத்திலும், ஆன்லைனிலும், போன் மூலமும் பாடங்களை தொடர்ந்து நடத்தி உள்ளனர். மலைப்பகுதி மற்றும் கிராம பகுதி குழந்தைகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இச்சூழலில், இன்னும், 15 நாளில் தேர்வு என்பதால், மணவ, மாணவியர் கடும் அச்சம் அடைந்துள்ளனர். தடாலடியாக தேர்வை நடத்தாமல், கொரோனா பாதிப்பு விலகியதும், அக்குழந்தைகளுக்கு பாடங்களை நடத்தி, தேர்வை அறிவித்து நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202013:33:04 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan படிப்பதற்கு ஊரடங்கில்லையே. கம்யூனிஸ்ட்கள் மக்களுக்கு கெடுதல் மட்டுமே செய்வார்கள். எப்படியாவது தர்ம பாஸ் போடுவார்கள் என்ற எதிபார்ப்பில் இப்படி போராடுகிறார்கள். தேர்வு நடத்தியே ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X