பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

Added : மே 14, 2020
Share
Advertisement

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து, வரட்டுப்பள்ளம் அணை வழியாக பர்கூர், கர்ககேண்டி, கர்நாடக மாநிலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. பகல் நேரங்களில் இந்த சாலை வழியாக வாகனங்கள் அதிகம் செல்லும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். அப்போது, யானை போன்ற வன விலங்குகள் சாலைகளில் நடமாட துவங்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக, வனப்பகுதி சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், விலங்குகள் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்கின்றன. அந்த வகையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே, பர்கூர் சாலையில் நேற்று முன்தினம் மாலை, சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்து வனத்துறையினரிடம் கூறினர். இது குறித்து அந்தியூர் வனச்சரகர் ருத்ரசாமி கூறியதாவது: ஊரடங்கால், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் சாலையில் நடமாடத்துவங்கியுள்ளன. மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும்போது, விலங்குகள் நடமாடுவது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X