பொது செய்தி

தமிழ்நாடு

20 நாளில் 500 டன் மஞ்சள் விற்பனை

Added : மே 14, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறை மற்றும் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த, 20 நாட்களில் நடந்த ஏலம் மூலம், 500 டன் மஞ்சள் விற்பனையானது.
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், 20 முதல், நான்கு இடங்களிலும் மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று இல்லாததால், சில தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால், ஏப்., 22 முதல் மாநகராட்சி பகுதிக்கு வெளியே உள்ள, ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மட்டும் மஞ்சள் ஏலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. வெளி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.

ஏல விற்பனை குறித்து, மாவட்ட விற்பனை குழு செயலாளர் சின்னசாமி கூறியதாவது: ஊரடங்கால், விவசாயிகள் பயன்பெறும் வகையில், மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஏலத்துக்கு கொண்டு வரப்படும் மஞ்சள் வரும், 31 வரை, குடோனில் எவ்வித கட்டணமும் இன்றி இருப்பு வைக்க அனுமதிக்கப்படுவர். பெருந்துறை குடோனில், 2,900 டன் மஞ்சள் இருப்பு வைத்துள்ளனர். அளுக்குளி குளிர்பதன கிடங்கில், கொள்ளு, மஞ்சள், பயறு வகைகள், புளி போன்ற விளை பொருட்கள், 550 டன் இருப்பு வைத்துள்ளனர். மேலும், ஏப்., 22 முதல் தற்போது வரை, 20 நாளில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 500 டன் மஞ்சள் விற்பனையாகி உள்ளது. விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X