பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்வு

Added : மே 14, 2020
Share
Advertisement

பெருந்துறை: பெருந்துறை அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், நேற்று கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. பெருந்துறை யூனியன், கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பால், கடந்த ஏப்., 11ல் முதியவர் ஒருவர் இறந்தார். அவர் வசித்த வீடுகளை சுற்றியுள்ள, 1,150 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, வீதிகளின் நுழைவு வாயில் தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டது. 30 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கான கட்டுப்பாடுகள் நேற்று விலக்கப்பட்டது. கருமாண்டி செல்லிபாளையத்தில், ஈரோடு ரோடு, வண்ணாம்பாறை, கண்ணகி வீதி, சுபாஷ் சந்திரபோஸ் வீதி, பங்களா வீதி, பாரதியார் வீதி, பவானி ரோடு ஆகிய பகுதிகள் மூடப்பட்டன. மேலும் தென்புறம் குமரன் வீதி, பிள்ளையார் கோயில் வீதி திலகர் வீதி யூனியன் காலனி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து தெருக்களில் உள்ள, அனைத்து நுழைவுகளும் ஏப்ரல், 11 முதல் மூடப்பட்டன. நேற்றுடன், 30 நாட்கள் முடிந்த நிலையில், நேற்று மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்திகணேஷ் முன்னிலையில் தடுப்புகள் அகற்றப்பட்டன.பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., தோப்பு. வெங்கடாச்சலம், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்பகுதியினர் நேற்று முதல் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X