ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் ஆய்வு

Added : மே 14, 2020
Share
ஈரோடு: ஈரோட்டில், 'சீல்' வைக்கப்படாத, டாஸ்மாக் கடையில், மாவட்ட மேலாளர் ஆய்வு செய்தார். ஈரோடு, ஜெயகோபால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முறைப்படி, 'சீல்' வைக்கவில்லை என போலீசார் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் கூறினர். இதையடுத்து நேற்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது, கடையில் உள்ள ஸ்டாக், விற்பனை விபரம் உள்ளிட்டவை

ஈரோடு: ஈரோட்டில், 'சீல்' வைக்கப்படாத, டாஸ்மாக் கடையில், மாவட்ட மேலாளர் ஆய்வு செய்தார். ஈரோடு, ஜெயகோபால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முறைப்படி, 'சீல்' வைக்கவில்லை என போலீசார் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் கூறினர். இதையடுத்து நேற்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது, கடையில் உள்ள ஸ்டாக், விற்பனை விபரம் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகள் ஆராயப்பட்டன. கூடுதல் எஸ்.பி., சார்லஸ், டி.எஸ்.பி., ராஜூ, கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் பால முருகன் ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர். கடையில் இருப்பில் உள்ள மதுபானங்கள், பட்டியல்படி சரியாக இருப்பதாக கூறி டாஸ்மாக் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின் கடைக்கு முறையாக சீல் வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X