தையல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தையல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள்

Added : மே 14, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, நலவாரியம் மூலம் அல்லது நேரடியாக கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்புக்காக மார்ச், 24 முதல் ஊரடங்கு உத்தரவால், தையல் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. வீட்டில் இருந்தும், கடைகள் வைத்தும், பெரிய மற்றும் சிறிய கார்மென்ட்ஸ்களில் பணி செய்யும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். துணிகள் தைப்பது, அளவீடு செய்தல், கார்மென்ட்ஸ்களில் குறிப்பிட்ட பணிகள் செய்வது என அனைத்தும் முடங்கியுள்ளன. இதுபற்றி, தையல் தொழிலாளர் சங்கம் குணசேகரன் கூறியதாவது: அமைப்பு சாரா நலவாரியம் மூலம், டிரைவர்கள், கட்டட தொழிலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும், 1,000 ரூபாய் சிறப்பு நிவாரணமாக வழங்கப்பட்டது. தையல் தொழிலில் உள்ளவர்களில் மிகக்குறைவானவர்களே, நலவாரியத்தில் உள்ளனர். எனவே, அவர்களது வாழ்வாதாரம் காக்கும் வகையில், அரசு சார்பில் நிவாரண தொகையை, நலவாரியம் மூலம் அல்லது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X