பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வால் பவானிசாகர் அணை பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடக்கம்

Added : மே 14, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பவானிசாகர் அணை பாலம் கட்டுமான பணி துவங்கியது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை முன், பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்து, ஓட்டை விழுந்ததால், பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 2018 ஏப்ரல் மாதம் பாலம் மூடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் பணிக்கு, 7.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2019 செப்டம்பரில், புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து, பவானிசாகர் அணையில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருந்ததால், பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. நீர்மட்டம் குறைந்ததால், புதிய பாலத்தின் கட்டுமான பணிகள், கடந்த ஜனவரியில் தொடங்கியது. பழைய பாலத்தின் அருகே, பவானி ஆற்றில் பாசனத்துக்காக செல்லும் தண்ணீரை ஒரு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. அதையடுத்து, பாலம் கட்டுமான பணிக்காக, அணையின் எதிர்புறம் பவானியாற்றை ஒட்டியிருந்த பொம்மீஸ்வரர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால், மேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது, தூண்கள் அமைப்பதற்காக, குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X