பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண நிதிக்கு ரூ.5.10 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

Added : மே 14, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் இருந்து செயல்படும் சக்தி மசாலா உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனம், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு, இரண்டாவது முறையாக, 5.10 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
அந்நிறுவன இயக்குனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்முயற்சிக்கு உதவும் வகையில், சக்தி மசாலா நிறுவனம் கடந்த மார்ச், 30ல் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 5 கோடி ரூபாய் வழங்கியது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைக்கு உதவும் வகையில் கடந்த, 11ல் இரண்டாவது முறையாக, 5.10 கோடி ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம். இதுவரை, 10.10 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கி, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக உள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X