சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரச்சலூரில் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

அரச்சலூர்: ஈரோடு அருகே கள்ளச் சாராயம் வைத்திருந்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று காலை அரச்சலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அரச்சலூர் புது வெள்ளியம்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், 54, மணி மகன் சண்முகம், 40, என்பது தெரியவந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த, மூன்று லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த, 40 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.போதையில் ரகளை: ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த அசோக்குமார் மகன் தேவா, 19; கூலி தொழிலாளி. அவரது வீட்டின் முன் நின்றிருந்தபோது, சொக்காய்தோட்டத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கார்த்திக், 22, கமலா நகரை சேர்ந்த துணிகடை ஊழியர் அஜித்குமார், 23, ஆகிய இருவரும் மதுபோதையில், தேவாவை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தேவா புகார் அளித்தார். கார்த்திக், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X