பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகத்துக்காக அமைக்கப்பட்ட சாரம் அகற்றம்

Added : மே 14, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷேகத்துக்காக அமைத்த சாரம் முழுவதும் அகற்றப்பட்டதால், கோபுரங்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
உலக புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபி?ஷகம் கடந்த, பிப்., 5ல் சிறப்பாக நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள கேரளாந்தகன் வாயில் கோபுரம், ராஜராஜன் வாயில் கோபுரம், 216 அடி உயரமுள்ள விமானம் (பெரிய கோபுரம்), அம்மன் சன்னதி கோபுரம் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் சாரம் அமைக்கபட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேக விழா முடிந்தும், கோபுரங்களில் கட்டப்பட்ட சாரம் அப்படியே இருந்தது. இதனால், கோபுரத்தின், அழகு முழுமையாக தெரியவில்லை. மேலும், தூரத்தில் இருந்து பார்த்தால், சாரம் கட்டப்பட்டிருந்ததால், கோபுரங்கள் கருப்பு நிறத்தில் காட்சியளித்தன. கொரோனா ஊரடங்கால் கோவில் மூடப்பட்டதால் சாரத்தை அகற்ற முடியவில்லை. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 3 மாதங்களுக்கு பின், கோபுரங்களில் இருந்த அனைத்து சாரங்களும் அகற்றப்பட்டு, பெரியகோவில் கோபுரங்களின் அழகை, புது பொலிவுடன் முழுமையாகக் காண முடிகிறது. இதை அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நின்று ரசித்துச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X